Posts
Showing posts from 2020
தெரிந்து கொள்வோம்
- Get link
- X
- Other Apps
A4 பேப்பர், A5 ஐ விட பெரியது. A3 பேப்பர் இவை இரண்டையும் விட பெரியது. எப்படி கணக்கிடுகிறார்கள்? என்ன கணக்கு இது? A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர் size களில் முதல் பெரிய size A0. தொடர்ந்து A1,A2, A3, A4…..A8 என்று செல்ல செல்ல அதன் size குறையும். ஒரு A0 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A1 paper கிடைக்கும். ஒரு A1 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A2 paper கிடைக்கும். ஒரு A2 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A3 paper கிடைக்கும். ஒரு A3 ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A4 கிடைக்கும். தொடர்ந்து வெட்ட வெட்ட அடுத்தடுத்த size கிடைக்கும். மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் முழு ஆப்பிள் பழத்தை A0 ஆக நினைத்து கொள்ளுங்கள். இரண்டாக சம அளவில் வெட்டினால் இரண்டு A1 கிடைக்கும். ஒரு A1 piece ஐ சம அளவில் வெட்டினால் இரண்டு A2 கிடைக்கும். Paper Size Width x Length (mm) A0 841mm X 1189mm A1 594mm X 841mm A2 420mm X 594mm A3 297mm X 420mm A4 210mm X 297mm A5 148mm X 210mm A6 105mm X 148mm A7 74mm X 105mm A8 52mm X 74mm Width ( அகலம் ) அடுத்தடுத்த size களின் length ஆக வரும். Length ( நீளம் ) ன் பாதி அடுத்தட...
திருந்த வேண்டியது நாம்தான்
- Get link
- X
- Other Apps
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது ...
TNTET - PSYCHOLOGY SYLLABUS, IMPORTANT QN-ANS AND STUDY MATERIALS
- Get link
- X
- Other Apps
PAPER 2 TNTET tntet-paper2-2019-original-question TNTET Child Development and Pedagogy SYLLABUS CLICK HERE STUDY MATERIALS UNIT I: Nature of Educational Psychology Unit II: Human Growth and Development1 Unit II: Human Growth and Development 2 Unit II: Human Growth and Development 3 Unit II: Human Growth and Development 4 UNIT III: Cognitive Development1 UNIT III: Cognitive Development 2 UNIT III: Cognitive Development 3 UNIT III: Cognitive Development 4 UNIT III: Cognitive Development 5 Important questions
(S.A.V.E.R.S )-அதிகாலை பழக்கவழக்கங்கள்
- Get link
- X
- Other Apps
வெற்றியாளர்களின் 6 முக்கியமான அதிகாலை பழக்கவழக்கங்கள். Book name : The miracle morning Author. : Hal Elrod அமைதி ( silence) தினமும் காலை எழுந்தவுடன் மவுனமாக 10நிமிடம் அமர்ந்து அன்றைய தின நிகழ்வுகளை பற்றி யோசியுங்கள். நமது இலட்சியத்திற்கு ஏற்றபடி தமது செயல் எவ்வாறு செய்வது என்று சிந்தியுங்கள். சுயபிரகடனம் ( Affirmation) தங்கள் என்னவாக வரவிரும்புகிறீர்களோ அதை பற்றி நீங்களே உங்களுக்குள் சுயபரகடனம் மேற்கொள்ளுங்கள். உதாரனம்: பொருளாதரம் ஆரோக்கியம் மற்றும் உறவுகள் சம்பந்தமாக கூட இருக்கலாம் மனகாட்சி படைப்பு ( Visualization) விசயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே அவற்றை பார்க்காமல் அவை நாளை உங்கள் வாழாவில் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை அப்படி மனக்காட்சியில் பாருங்கள். உடற்பயிற்சி ( Excersise ) அதிகாலையில் உடற்பயிற்சி (அ) நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். "நீங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் நீங்கள் நோயிக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று அர்த்தம்" நல்ல புத்தகங்களை வாசித்தல் (Reading ) உங்கள் வாழ்கை பயணத்தை அதிவ...
இள நெஞ்சில் எழுச்சி தீபமே ஆசிரியர் லட்சியம்!
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்கள் மீதும் தீராத அன்புள்ளம் கொண்டுள்ளவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம். எதிர்கால இந்தியா இன்றைய மாணவர்களை நம்பி உள்ளது என்பதில் மாற்றிக்கருத்து இல்லாதவர். மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி பாடமாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த கருத்து. ஒரு சிற்பி வெரும் சிற்பியாக மட்டுமே வாழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கில் சிற்பங்களை மட்டுமே உருவாக்கி இருப்பர். அந்த சிற்பி ஆசிரியர் குணநலன் கொண்டு அக்கலையை மற்றவர்களுக்கு கற்பித்தால் ஆயிரக்கணக்கான சிற்பிகளை உருவாக்கி அதன்மூலம் லட்சக்கணக்கான சிற்பங்களை செதுக்கி இருக்க முடியும். அதுவே ஆசிரியர் பணி. அத்தகைய ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் குறித்து டாக்டர் அப்துல்கலாம் எழுதுகிறார்... பள்ளிகள், கல்லூரிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர் தின நிகழ்ச்சிகளின் போது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏறத்தாழ 30 லட்சம் மாணவர்களையும் 2 லட்சம் ஆசிரியர்களையும் சந்தித்திருக்கிறேன். நான் ஆசிரியர்களை சந்திக்கும் போ தெல்லாம் அவர்களுக்கு ஏழு அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்...
திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
- Get link
- X
- Other Apps
சிறியதொரு நகரம். அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மரணத்திற்கு அஞ்சி,மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் க...
உழைப்பே உயர்வினை தரும்.
- Get link
- X
- Other Apps
அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்......!! அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!! யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!! அரசன் காலையில் எழுந்து கொண்டபோது , நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!! அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!! அரசன் அந்த நெசவாளியிடம் "இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!! ‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!! குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது...... ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!! ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!! இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!! இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!! அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!! ‘...
எதுவும் கைகொடுக்காது
- Get link
- X
- Other Apps
ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.... ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க.... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த...
பலர் மனதில் வாழ வைக்கும்
- Get link
- X
- Other Apps
'எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை' - இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார். இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள். சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. அவர் முன்னாளில் எப்...
எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்
- Get link
- X
- Other Apps
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது. அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் . பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார். அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கப்பல் வியாபாரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் ...
நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
- Get link
- X
- Other Apps
கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்தது விடும். உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நன்றி
தோல்வியை கண்டு துவண்டு போககூடாது... முயற்சி செய்தால் வெற்றி நமதே...
- Get link
- X
- Other Apps
எதுவெல்லாம்கெடும்
- Get link
- X
- Other Apps
#முன்னோர்களின்_அருள்வாக்கு..!!! பாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும் ஓதாத கல்வி கெடும் ஒழுக்கமில்லா வாழ்வு கெடும் சேராத உறவும் கெடும் சிற்றின்பன் பெயரும் கெடும் நாடாத நட்பும் கெடும் நயமில்லா சொல்லும் கெடும் கண்டிக்காத பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் பிரிவால் இன்பம் கெடும் பணத்தால் அமைதி கெடும் சினமிகுந்தால் அறமும் கெடும் சிந்திக்காத செயலும் கெடும்.. சோம்பினால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் மோகித்தால் முறைமை கெடும் முறையற்ற உறவும் கெடும் அச்சத்தால் வீரம் கெடும் அறியாமையால் முடிவு கெடும் உழுவாத நிலமும் கெடும் உழைக்காத உடலும் கெடும் இறைக்காத கிணறும் கெடும் இயற்கையழிக்கும் நாடும் கெடும் இல்லாலில்லா வம்சம் கெடும் இரக்கமில்லா மனிதம் கெடும் தோகையினால் துறவு கெடும் துணையில்லா வாழ்வு கெடும் ஓய்வில்லா முதுமை கெடும் ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் அளவில்லா ஆசை கெடும் அச்சப்படும் கோழை கெடும் இலக்கில்லா பயணம் கெடும் இச்சையினால் உள்ளம் கெடும் உண்மையில்லா காதல் கெடும் உணர்வில்லாத இனம...
9th std mathematics subject -definitions
- Get link
- X
- Other Apps
1.கணம் நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு கணம் எனப்படும் 2.கணத்தை குறிப்பிடும் முறைகள்: * விவரித்தல் முறை * கணக்கட்டமைப்பு முறை * பட்டியல் முறை 2.கணங்களின் வகைகள் * வெற்றுக் கணம் * ஓர் உறுப்பு கணம் * முடிவுறு கணம் * முடிவுறாக் கணம் * சமான கணங்கள் * சம கணங்கள் * அனைத்துக் கணம் * உட்கணம் * தகு உட்கணம் * வெட்டாக் கணங்கள் * அடுக்குக் கணம் Unit 2: மெய்யெண்கள் 1. விகிதமுறு எண்கள் ஒரு விகிதமுறு எண் என்பது இரு முழுக்களின் பின்ன வடிவத்தின் ஈவு ஆகும். இதைப் பூச்சியத்தால் வகுத்தலை மட்டும் தவிர்க்க வேண்டும். 2. விகிதமுறா எண்கள் இரு முழுக்களை விகிதமாக எழுத இயலாத எண்களே விகிதமுறா எண்கள் ஆகும். 3. முடிவுறு தசம எண்கள் வகுத்தல் செயலானது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தசம வடிவில் முடிவுறும். இவை முடிவுறு தசம எண்கள் எனப்படும். 4. மெய்யெண்கள் அனைத்து விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களையும் உள்ளடக்கியது மெய்யெண்கள் ஆகும். 5. முறுடுகள் முறுடு என்பது ஒரு விகிதமுறு எண்ணின் ...