நம்பிக்கை
எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை ...
எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும்,
நீ தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை
நீ நினைப்பதெல்லாம் உனக்கு நடக்க,
நீ பலமாக உணர்ந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை ...
நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும், நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை
உற்றாரும், பிறரும் உனக்கு
உதவி செய்ய, நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை ...
உனக்கு உதவ யாருமே இல்லாத சமயத்திலும்,
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை
எல்லோரும் உன்னைக் கொண்டாட, நீ
சந்தோஷமாக இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை ...
எல்லோரும் உன்னை அவமதித்து, ஒதுக்கி
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை
உன் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய,
நீ அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை ...
உன் எல்லா முயற்சிகளும் தோல்வியடைய,
அதிலிருந்து நீ பாடம் கற்று முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை
எல்லோரும் நம்பகமாய் நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை ...
உனக்கு வேண்டியவரெல்லாம் உன் முதுகில்
குத்தும் போது, நீ தெளிவான வழியில் சென்றால் அதன் பெயரே நம்பிக்கை
உன்னிடத்தில் எல்லாம் இருக்க, நீ எதிர்
காலம் பற்றிக் கவலை கொள்ளாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை ...
உன்னிடம் எதுவும் இல்லாத பட்சத்தில், நீ எதிர்காலம் பற்றிப் பயப்படாமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை!!!
உனக்கு நம்பிக்கை இருக்கின்றதா.....???
நம்பிக்கை இருந்தால் நல்லது......!!!
Comments
Post a Comment