பர்சில் 2000 ரூபாய் நோட்டு இருக்கிறதா?



இருந்தால்,அதை எடுத்து அதன் பின் பக்கம் பாருங்கள்.அதில் ஒரு விண்கலத்தின் அச்சிடப்பட்டு இருக்கும்.

படம் இருக்கிறதா?இத்தனை நாள் அதை நீங்கள் கவனித்தீர்களா?

ஆம் கவனித்தேன் என்றாலும் கவனிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

அது என்ன விண்கலம்? ரூபாய் நோட்டில் போடும் அளவிற்கு அது செய்த சாதனை என்ன?...என்ற கேள்விகள் இப்போதாவது வருகிறதா?

அந்த விண்கலத்தின் பெயர் மங்கள்யான்....

அது அப்படி என்ன சாதனைகளை செய்துள்ளது? 

சுருக்கமாக நான்கு காரணங்கள்.

1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து,பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு.தமிழில் விடுபடு திசைவேகம்.இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும்.குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது.பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.இறந்த பின் எஸ்கேப் வேலிசிட்டி வேகத்தை அடைய முடியாத ஆன்மாக்கள் தான் பூமியை விட்டு வெளியேற முடியாமல் பேய்-பிசாசுகளாக முருங்கை மரத்திலோ-புளியமரத்திலோ திரியும்ன்னு கூட சொல்லலாம்.

ஆனால் மங்களயான் எஸ்கேப் வேலாசிட்டி வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது.இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும்,ராக்கெட்களும் இதைக் கடந்து தானே சென்றன? 

ஆம்.இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும ராக்கெட்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேல் இருந்தன.ஆனால் மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே.இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலை அல்ல.திறமையான டிசைன் வேண்டும்.உச்சபட்ச தொழில் நுட்பம் வேண்டும்.நம் விஞ்ஞானிகள் இதைச் செய்தார்கள்.

2.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பதென்றால் ஒரு ராக்கெட்டை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல.அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்ய வேண்டும்.

சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்-ஒவ்வொரு வேகத்தில்,ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும்.செவ்வாயின் வேகம் வேறு.பூமியின் வேகம் வேறு.நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒரு ஒவ்வொரு கோளும்-தன் பக்கத்திலுள்ள கோளுக்கு-ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும்.அந்தப் புள்ளியை Perigee என்பார்கள்.அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்குமிடையிலான அந்த Perigee க்கணக்கிட்டு,அந்தப் புள்ளியில் ராக்கெட்டை அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் செவ்வாயின் தூரம் கூடும்.செலவும் எகிறும்.அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

நம் ஆனால் நம் விஞ்ஞானிகள் Perigee யை துல்லியமாகக் கணக்கிட்டு மங்கள்யானை கொண்டு சென்றார்கள்.செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள்.

3.அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது-மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும்.இங்கே தான் ஒரு சவால்.பூமியில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும்.மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும்.ஆக அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும்.ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால்,அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!!அதையும் நம் விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள்.

4.இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா? 

முதல் முயற்சியில்...

ஆம் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.

ஆனானப்பட்ட அமெரிக்காவே செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றியடைந்தது.இந்தியா தன் முதல் முயற்சியிலேயே-சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து-அடித்த அந்த பந்து ஸ்டேடியத்தைத் தாண்டியது.ஆம்.அப்படிப்பட்ட நெத்தியடியாக அமைந்தது,"மங்கள்யானின்" பயணம்.

5.இவற்றிக்கெல்லாம் மேலாக இருந்தது மங்கள்யான் திட்டத்மிற்கான செலவு தான்.அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம்.ஆனால் மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா? 

வெறும் 454 கோடிகளில்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும்,கொசுக்களும் நிறைந்த நாடென்றும்,அழுக்கான,சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும்,You can piss in public,But you can't kiss in public in India-என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி.

அமெரிக்கா,ரஷ்யா,இங்கிலாந்து,
ஐரோப்பா என உலகத்தின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான்.அதனால் தான் மங்கள்யானுக்கு ரூபாய் நோட்டில் இடம்.

மங்கள்யான் நம் திறமையின் அசுரப் பாய்ச்சல்...




Comments

Post a Comment

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material