Posts

Showing posts from November, 2019

கோபப்படும் உரிமையை நீதானம்மா கொடுத்த

Image
மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத் தேடியபோதுதான் மண்டபத்தில் தாய்மாமனைக் காணவில்லையென்று அறிந்தது மணமேடை பத்திரிக்கையில் தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற கோபத்தை கல்யாணத்தை புறக்கணித்தலால் ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன் மண்டப வாசலில் முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார் கையைப் பற்றிய மச்சானின் அழைப்பை உதறிவிட்டு தங்கையின் அழுகையை தரையில் எறிந்தார் பங்காளிகள் பஞ்சாயத்தை சொம்போடு வீசினார் யார் பேச்சுக்கும் மசியாமல் வீராப்பு காட்டியவரை மாமா என்றழைப்பில் கண்ணீர் கசியச் செய்த மணப்பெண் மணமேடை இறங்கியிருந்தாள் நீ எதுக்கும்மா வந்த என்று துண்டு கீழே விழுந்தது தெரியாமல் உருகியோடியவர் பொண்ணை மணமேடையில் நிறுத்தியபோது நல்ல நேரம் துவங்கியிருந்தது நான் கோபப்படும் உரிமையை நீதானம்மா கொடுத்த என்றபடி தாய்மாமன் சீர் செய்தவரின் காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில் அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார் ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம் மண்டப வாசலில் துண்டாகிக் கிடந்தது வீராப்பு.

🔎 *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே* 🔍

Image
இளம் வயது பெண்  ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை  நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என  ஆதங்கப்பட்டார். அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! *"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"* இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,  வாய்ச்சண்டை போடு...

வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது

ஒரு #கிராமம். 👦 சிறுவன் ஒருவன் #ஏரிக்கரையில்_விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “#என்னை_காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் #முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. உன்னை விடுவித்தால் என்னை #விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று #கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை. பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். #இதுதான்_உலகம்_இதுதான்_வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு #சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை #ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், #நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. #மரத்திலிருந்த_பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ...

விளம்பரம் செய்த மாயை

Image
இன்று ஆரோக்கியத்தினை அடகு வைத்துவிட்டோம்... #விழிப்புணர்வுபதிவு.... #அரிசிச்சோறு சாப்பிட்டா #சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிடச் சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்கன்னு சொன்னாங்க. சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா #பூச்சிமருந்து தெளிக்கறாங்க #ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க. போய்ப் பார்த்தா ஆனை விலை ,குதிரை விலை. இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம். இப்ப என்னடான்னா #ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய்தான் ஆர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.... உப்பையும், சாம்பலையும் #வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம்.  இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா #எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால #பேஸ்ட் தான் நல்லதுன்னு சொன்னாங்க.  அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி.... கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கான்னு கேக்குறான்.  பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட்...

TNTEU -B.Ed. FIRST YEAR SYLLABUS

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக முதலாமாண்டு பி.எட். மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை பெற CLICK  HERE

WORKING MODEL - ALL IN ONE (ANGELES))

எளிய விளக்கங்களும் கணிதத்தை மனதில் நிலை நிறுத்தும்.  c lick here

Ven diagram TLM

 கணிதத்தை எளிய முறையில் கற்பிக்க கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்த படுகின்றது. click  here

Attitude என்றால் என்ன???

ஒரு விளம்பரம். Attitude குறும்படம்.பத்து செகண்ட்தான். ஒரு பெண் மாடல் மேடையில் நடந்து வருகிறாள். மிகவும் அழகு. பொம்மை போல. அவள் தான் வெற்றி பெறுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். unfortunately, பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள். மொத்த பார்வையாளர்களும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள். அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது. ஒரே ஒரு செகண்ட்தான். தன் கையை தானே மகிழ்ச்சியாக தட்டிக் கொண்டாள்,,  மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள். பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு. இது தான் Attitude. கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே அது Attitude. சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது. அப்பா இறந்து இரண்டு நாள்தான். அஸ்தி கூட கரைக்கவில்லை. Test ல் ஆட வேண்டிய நிர்ப்பந்தம். சென்றவர் Century அடித்தார். அடித்த பிறகு, மெல்ல...

சமூக சேவையில் மீனாட்சி கல்வியியல் கல்லூரி

தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது மட்டுமல்ல ,சமூக நலத்தையும் போதிக்கும் மங்கரை பிரிவு ,பழனி சாலையில் அமைந்துள்ள மீனாட்சி கல்வியியல் கல்லூரி,இன்று ரெட்டியார் சத்திரத்தில் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு , மற்றும் நிலவேம்பு கசாயமும் ,கல்லூரி முதல்வர் திரு . Dr. மில்ட்டன் sir தலைமையில் மக்களுக்கு வழங்கப்பட்டது . சிறப்பு விருந்தினராக ரெட்டியார் சத்திர காவல் ஆய்வாளர் கலந்துகொண்டு மக்களுக்கு நில வேம்பு கசாயத்தை கொடுத்து தொடங்கி வைத்தார். இச் சமூக பணியில் உதவி பேராசிரியர்களும், மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு நில வேம்பு கஷாயத்தை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழ் மின் நூலகம் (Tamil digital library)

Image
தமிழ் நூல்களை பெற  இங்கே சொடுக்கவும்

மனிதன்_கற்றுக்கொள்ள வேண்டிய_21_பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். 2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். 3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில...

1.மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும் ,2.மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்,3.எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை... ``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.   ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.  ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.  அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;   இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப...

நம்பிக்கை

   எல்லாம் ஒழுங்காக நடக்க, நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை ... எதுவுமே ஒழுங்காக  நடக்காதிருக்கும் போதும், நீ தைரியமாக வாழ்ந்தால்  அதன் பெயரே நம்பிக்கை நீ நினைப்பதெல்லாம் உனக்கு நடக்க, நீ பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை ... நீ நினைக்காத பயங்கரங்கள் உனக்கு நடந்தாலும், நீ அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை உற்றாரும், பிறரும் உனக்கு உதவி செய்ய, நீ நிதானமாக இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை ... உனக்கு உதவ யாருமே இல்லாத சமயத்திலும், நீ பக்குவத்தோடிருந்தால்  அதன் பெயரே நம்பிக்கை எல்லோரும் உன்னைக் கொண்டாட, நீ சந்தோஷமாக இருந்தால் அதன் பெயர்  நம்பிக்கையில்லை ... எல்லோரும் உன்னை அவமதித்து, ஒதுக்கி அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால் அதன் பெயரே நம்பிக்கை உன் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய, நீ அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை ... உன் எல்லா முயற்சிகளும் தோல்வியடைய, அதிலிருந்து நீ பாடம் கற்று முயன்று கொண்டேயிருந்தால்  அதன் பெயரே நம்பிக்கை எல்லோரும் நம்பகமாய் நடக்க, நீ தெளிவாய் முடிவெடுத்தால் அதன் பெயர் நம்பிக்கையில்ல...

எண்ணங்கள் அழகானால்...எல்லாம் அழகாகும்.

வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான். அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார். இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேள...

பாப்பா பாட்டு

குழந்தை களுக்காக மகரிஷி இயற்றியது. சின்ன வயது குழந்தைகளே! சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்! அன்னை தந்தை இருவருக்கும், அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்! பல்லைத் துலக்கி முகங்கழுவிப் பரமனை மனதில் நினையுங்கள்! எல்லையில்லா ஆனந்தம்  எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில். உள்ளத்தன்பால் உருக்கமுடன்  உங்கள் ஆசான் போதித்த, பள்ளிகூடப் பாடத்தைப் படிக்கவேண்டும் இருதடவை. வீட்டுக் கணக்கைப் போட்டுப்பின்  விடைகள் சரியா எனப்பாரீர்! நாட்டுக் குழைத்த நல்லோரின்  நினைவை என்றும் மறவோமே! அம்மா கொடுக்கும் ஆகாரம்; அளவாய் உண்ண வேண்டும்அதை; சும்மா அதிகம் சாப்பிட்டால்  சுகத்தைக் கெடுக்கும்; அறிந்திடுவோம். நேரம் தள்ளிப் போகாமல், நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய், ஆரம்பிக்கும் முன்னாலே  அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே. ஊக்கத்தோடு படித்தோர்கள் உயர்ந்தோரானார் பலர்; அந்த  நோக்கத்தோடு கல்விதனை  நன்றாய் கற்றுத் தேர்ந்திடுவோம்! தினமும் மாலை வேளையிலே  திறமையாகப் பலர் கூடி, மனமும் உடலும் நலமடைய  மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்! அந்திவேளை மேற்குப் புறம்  ஆகாயத்தைப் பார்த்திடுவோம்! விந்தையாக மே...

மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி ஏழைகளை மகிழ்ச்சி படுத்திப் பார்ப்பது

எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”  – தவித்தார் அந்த தந்தை . அவர் பெயர் அஜய் முனாட் .  மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் . அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .  தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .  கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய  ...இல்லையில்லை ... மிகப் பெரிய மாற்றத்தை செய்யலாமா என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய் .  ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே ... முக்கியமாக மகள் ஸ்ரேயா ..? அவள் சம்மதிக்க வேண்டுமே ..? சரி ...சிந்தித்துக் கொண்டே இருந்தால் செயல்படுத்துவது எப்படி ? ஒருநாள் ... குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தார் அஜய் . மகள் ஸ்ரேயாவும் அங்கிருந்தாள் . அஜய் தன் மனதில் இருந்த ஸ்ரேயாவின் கல்யாணம் பற்றிய திட்டத்தை, மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் . சொல்லும்போதே மகள் ஸ்ரேயாவின் முகத்தை உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை...

அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது

படித்தில் பிடித்த கதை... ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையி...

ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்....... பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான். "நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான் வடக்கே யாத்திரை செல்கிறேன். இரண்டொரு மாதங்களில் திரும்ப வருவேன். அப்போது வந்து என்னை மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு சென்றார். *༺♦༻* இவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. மக்களின் தேவையை அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான். தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில் ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து ஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளை வாங்கி வந்து தனது கடையில...

மகிழ வைத்து மகிழுங்கள்.. உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்

ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்." கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார். பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.. " என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்ப...

திருக்குறள் - மருந்தே வேண்டாம்

இன்று எந்தக் கடைத் தெருவுக்குப் போனாலும், பல மருந்துக் கடைகளை காண முடிகிறது. மருத்துவர்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மருத்துவ மனைகள் என்று எங்கு பார்த்தாலும் நோயும், மருந்துமாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன. ஏன் நோய் இவ்வளவு மலிந்து கிடக்கிறது ? நோய் வருவதற்கு சாப்பாடு ஒரு காரணம் என்று பார்த்தோம். எதை உண்பது, எவ்வளவு உண்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது. அந்த டயட், இந்த டயட் என்று குழப்புகிறார்கள். அதைச் சாப்பிட்டால் எடை கூடும், இதைச் சாப்பிட்டால் கேன்சர் வரும், அது நெஞ்செரிச்சல் தரும் என்று ஏகத்துக்கு குழப்புகிறார்கள். இதற்கிடையில் மாமிசம் சாப்பிடலாமா கூடாதா என்று காலம் காலமாய் வரும் ஒரு வாதம். ஆகக் கூடி குழப்பம் தான் மிஞ்சுகிறது. வள்ளுவர் அதைத் தெளிவாக்குகிறார். பாடல் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் பொருள் மருந்தென = மருந்து என்ற ஒன்று வேண்டாவாம் = தேவையில்லை யாக்கைக்கு  = உடலுக்கு அருந்தியது = உண்டது அற்றது = காலியான பின் போற்றி  = அறிந்து உணின் = உண்டால் இந்த உடம்புக்கு மருந்தே வேண்டாம் ,எப்போது என்றால், ம...

ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம்   “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”  பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.  "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.  அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.  ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.  உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.  பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது ...

அன்னமும்_பாலும்

அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் எனப்து நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.  ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி  இருக்கிறார்கள்.    நான் சில மிருகக் காக்ஷி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீனக்ளையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.    எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப்பற்றியே சிந்தித்தேன்.  ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது "அடடா, #அன்னம் என்பதற்கு #அரிசி_சாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் சிந்திக்க வில்லையே என்று யோசித்தேன்.  பிறகு சொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் ...

ஐந்து வில்லன்கள்

நாம் முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள். யார் ஐந்து வில்லன்கள்..?அந்த ஐந்து வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.. இப்போது, சினிமாவில் வருவது போல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம். அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ஊக்கமின்மை: ................................ நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்.., மாற்றம்: .................... நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்... மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள். பிரச்சனைகள்: ............................ பிரச்சனைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்,. ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒர...

திருக்குறள் தொடர்பான செய்திகள்

1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள். 2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள். 3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர். 4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர். 5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.6 . திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு. 7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு. 8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு. 9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர். 10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர். 11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார். 12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான். 13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. 14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம். 15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம். 16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது. 17. திருக்குறள் இலண்டனில் விவ...

பர்சில் 2000 ரூபாய் நோட்டு இருக்கிறதா?

Image
இருந்தால்,அதை எடுத்து அதன் பின் பக்கம் பாருங்கள்.அதில் ஒரு விண்கலத்தின் அச்சிடப்பட்டு இருக்கும். படம் இருக்கிறதா?இத்தனை நாள் அதை நீங்கள் கவனித்தீர்களா? ஆம் கவனித்தேன் என்றாலும் கவனிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அது என்ன விண்கலம்? ரூபாய் நோட்டில் போடும் அளவிற்கு அது செய்த சாதனை என்ன?...என்ற கேள்விகள் இப்போதாவது வருகிறதா? அந்த விண்கலத்தின் பெயர் மங்கள்யான்.... அது அப்படி என்ன சாதனைகளை செய்துள்ளது?  சுருக்கமாக நான்கு காரணங்கள். 1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து,பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு.தமிழில் விடுபடு திசைவேகம்.இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும்.குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது.பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.இறந்த பின் எஸ்கேப் வேலிசிட்டி வேகத்தை அடைய முடியாத ஆன்மாக்கள் தான் பூமியை விட்டு வெளியேற முடியாமல் பேய்-பிசாசுகளாக முருங்கை மரத்திலோ-ப...

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.. அவங்க பண்றாங்க, இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்.. கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் கவலைப்படாதீர்கள். பிறருடன் அவசியம் இல்லாமல் போட்டி இடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டி இடுங்கள்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்..  இரண்டு வெவ்வேறு குருக்களின் சீடர்கள் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.. ஒரு சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான். "என் குரு மாயா ஜாலங்களின் மன்னர். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படிப் பல அதிசயங்களைச் செய்வார்.  உன் குரு என்ன செய்வார்?”, என்று மற்ற சீடனிடம் கேட்டான். அதற்கு அந்த சீடன்,,, "எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார்’’.  நீ சொல்வது போல் எதுவும் என் குரு செய்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை.. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என அவரிடமே விசாரித்து விட்டு வருகிறேன் என்றான். அடுத்த நாள் இரண்டு சீடர்களும் சந்தித்துக் கொண...