முளைகட்டிய சத்துமாவு
உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், வரகு, திணை, கைக்குத்தல் அரிசி, பாசிப்பயறு, பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கொண்டக்கடலை வெள்ளை, கருப்பு, காராமணி, ஓமம், கடலை, எள்ளு, ஏலக்காய் மற்றும் பல சத்தான பொருட்கள் சேர்க்கப்பட்டுள
்ளது. சர்க்கரை (அஸ்கா) சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது.
இதை கஞ்சியாக தயார்செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நேரம் ஆனாலும் பருகலாம். மேலும் இதை சப்பாத்தி, தோசை, இட்லி, புட்டு, இனிப்பு உருண்டை என பல வகைகளில் தயாரித்து பயன்படுத்த முடியும்.
குழந்தைகள் இந்த வயல்வெளி சத்துமாவை தொடர்ந்து பருகுவதனால்: குழந்தைகளின் உடல் உறுதிப்படும். நியாபகசக்தி அதிகரிக்கும். பசியின்மையை போக்கும். ஜீரணம் சரிப்படும்.எப்ப
ொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
பெரியவர்கள் தொடர்ந்து பருகுவதன் மூலம்: ரத்தத்தை சுத்தம் செய்கிறது. அனைத்து உறுப்புகளும் சரிவர இயங்குவதற்கான அத்தியாவசிய ஊட்டசத்துக்கள் கிடைக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் எந்த நிலையில் இருந்தாலும் அதை சமன் செய்ய பேருதவி புரிகிறது.
இது குறிப்பாக இன்சுலின் குறைபாட்டை சரி செய்கிறது.மேலும் அஜீரண குறைபாட்டை குறுகிய காலத்தில் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ஒட்டுமொத்த உடலில் உள்ள கொழுப்புகளை சமன் செய்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைகிறது.
பெண்களுக்கு தொடர்ந்து பருகுவதன் மூலம்: பெண்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடு, இரும்புசத்து குறைபாடு, பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் குறைபாட்டை சமன் செய்கிறது. இதனால் பெண்களுக்கு அவர்களுடைய மாதவிலக்கின் போதும், கர்ப்பகாலத்திலும் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கிறது. எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது
இதயம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளும், மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட குறைபாடுகளும், சிறுநீரகம், கிட்னி, கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளை சரிவர இயங்குவதற்கும் மேலும் இங்கு ஏற்படும் குறைபாட்டை சரிசெய்வதிலும் சத்துமாவு முக்கிய பங்கு வகிக்கிறது.
கஞ்சி: இரண்டு டீ ஸ்பூன் வயல்வெளி சத்துமாவு எடுத்து தனியாக ஒரு கின்னத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக்கொள்ளவே
ண்டும்.அதன்பிறகு இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஆர்கானிக் நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட வேண்டும், பிறகு அதில் கரைத்து வைத்துள்ள சத்துமாவு கலக்க வேண்டும்.மூன்று முதல் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, சூடாக பரிமாறலாம். தேவைப்பட்டால் தேங்காய் துருவலை கலந்து பருகலாம்.
சப்பாத்திி: சத்துமாவை எடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு கலக்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து நமக்கு தேவையான அளவில் தேய்த்து கொள்ள வேண்டும். தேய்த்து உள்ளவற்றை தோசை கடாயில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறலாம். குருமா வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்
தோசை: சத்துமாவை ஏற்கனவே இருக்கும் தோசை மாவுடன் கலந்தோ அல்லது வயல்வெளி சத்துமாவை தனியாக கரைத்தோ 15 நிமிடம் கழித்து தோசை ஊற்றலாம். சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்
இட்லி: சத்துமாவை ஏற்கனவே இருக்கும் இட்லி மாவுடன் கலந்து கரைத்து 15 நிமிடம் கழித்து தோசை ஊற்றலாம். சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்
புட்டு: சத்துமாவை சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரி உதிரியாக வரும்படி கலந்து கொள்ள வேண்டும்.அதில் ஆர்கானிக் நாட்டு சர்க்கரையை கலந்து 15 நிமிடம் ஆவியில் வைக்க வேண்டும்.பிறகு அதில் ருசிக்கு ஏற்ப சிறிதளவு ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் கலந்து பரிமாறலாம்.
இனிப்பு உருண்டை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆர்கானிக் நாட்டு சர்க்கரையை கலந்து கொதிக்க விட வேண்டும், பின்னர் அதில் வயல்வெளி சத்துமாவை சிறிது சிறிதாக கலந்து உருண்டை பிடிக்கும் பதம் வரும்வரை கலந்து பின்னர் அதை உருண்டைகலாக பிடித்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறு உணவாக தரலாம்.
தேவைக்கு 99529 46997. (CHENNAI ONLY)
Comments
Post a Comment