காப்பு கட்டுதல்

 வீட்டு நிலைகளில் பொங்கலுக்கு காப்பு கட்டுவதில் முன்னோர்களின் மருத்துவ சிந்தனை..!!


காப்பு கட்டுதல் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி!!!!


பொங்கலுக்கு முந்தின நாள் போகிப்பண்டிகை கொண்டாடும்போது வேப்பிலை, பூளைப்பூ அல்லது சிறுகண்பீளைப்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டு கூரைகளில் தோரணமாக கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் சொருகி வைப்பார்கள். 


பொதுவாக இவை மூன்றுமே கிருமிநாசினியாகும். நோய் நொடி வராமல் இருக்கவும், துஷ்ட தேவதைகள் அல்லது காத்து கருப்பு நம்மை தாக்காமல் இருக்கவும் இவற்றை பயன்படுத்துவார்கள். இதைத்தான் காப்பு கட்டுதல் என்று சொல்கிறார்கள்.


இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கல் திருவிழா என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அப்போது புதிதாக மலரும் பூக்களையும் பறித்து சூரியனை வணங்கும் ஒரு விழாவாகும். 


தை மாதத்தில் மலரும் ஆவாரம்பூ மற்றும் அப்போது தளிர்த்து பூத்து நிற்கும் கண்ணுப்பிள்ளை அல்லது சிறுகண்பீளைப்பூவையும் பறித்து வந்து படைக்கிறார்கள். களிமண்ணைப்பிடித்து அதில் ஆவாரம்பூவைச் சொருகியும் வைப்பார்கள்.


 சிறுகண்பீளை பூச்சிகள் வராமல் தடுக்கக்கூடியது. மேலும் அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடியது. 


மழை, பனிகாலம் முடிந்து வெயில் தொடங்கும் இந்த காலகட்டத்தில் அம்மை போன்ற நோய்கள் பரவாமலிருக்க நம் பழங்காலத்தமிழர்கள் இந்த நிகழ்வை பாரம்பரியத்தோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களாக தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்!!!!!


அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்தபிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன.


 விதைகள் கெட்டுப் போகாமல் பத்திரமாக இருந்து அந்த வீட்டுக்கும், உழவுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே வீடுகளில் காப்பு கட்டப்படும் வழக்கம்

பலங்காலத்திலிருந்து கடைபிடிக்கின்றனர்...


விளைகிற நிலங்களும் அதில் விவசாயிகளுடன் சேர்ந்து பாடுபடும் கால்நடைகளும்கூட பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்ற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துக் பூ காப்பு கட்டப்படுகின்றது!!!

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material