நம்பிக்கை


_எல்லாம்_ _ஒழுங்காக நடக்க,_
நீ_ _நம்பிக்கையோடு இருந்தால்_
_*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை.*_

_எதுவுமே ஒழுங்காக_
_நடக்காதிருக்கும் போதும், நீ_
_தைரியமாக_ _வாழ்ந்தால்_
_*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_

_நீ நினைப்பதெல்லாம் உனக்கு_
_நடக்க நீ பலமாக உணர்ந்தால்_
_*அதன் பெயர்*_
_*நம்பிக்கையில்லை . . .*_

_நீ நினைக்காத பயங்கரங்கள்_
_உனக்கு_ _நடந்தாலும் நீ_
_அசராமலிருந்தால்_
_*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_
 
_உற்றாரும் பிறரும்_
_உனக்கு உதவி செய்ய,_
_நீ நிதானமாக இருந்தால்_
_*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*_

_உனக்கு உதவ யாருமே_
_தயாராக இல்லாத_ _சமயத்திலும்_
_நீ_ _பக்குவத்தோடிருந்தால்_
_*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_

_எல்லோரும் உன்னைக்_
_கொண்டாட, நீ_ _சந்தோஷமாக_
_இருந்தால்_ _*அதன் பெயர்*_
_*நம்பிக்கையில்லை . . .*_

_எல்லோரும் உன்னை_
_அவமதித்து_ _ஒதுக்கித் தள்ள_
_அவர்கள் முன்_ _ஜெயிக்கப்_ _போராடினால்_
_*அதன் பெயரே*_ _*நம்பிக்கை ! ! !*_
 
_உன்_ _முயற்சிகளெல்லாம்_
_வெற்றியடைய நீ அழகாக_
_திட்டமிட்டால்_ _*அதன் பெயர்*_
_*நம்பிக்கையில்லை . . .*_

_உன்னுடைய எல்லா_ _முயற்சிகளும்
தோல்வியடைய,_ _அதிலிருந்து_
_பாடம் கற்று நீ முயன்று_ _கொண்டேயிருந்தால்_
_*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_

_எல்லோரும் உனக்கு_
_நம்பகமாக நடக்க, நீ_
_தெளிவாய்_ _முடிவெடுத்தால்_
_*அதன் பெயர்*_ _*நம்பிக்கையில்லை . . .*_

_உனக்கு வேண்டியவரெல்லாம்_
_உன் முதுகில் குத்திக்_ _கொண்டேயிருக்க_
_நீ தெளிவான வழியில் சென்றால்_
_*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_

_உன்னிடத்தில் எல்லாம் இருக்க,_
_நீ எதிர்காலத்தைப் பற்றிக்_
_கவலையில்லாமல் இருந்தால்_
_*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*_

_உன்னிடத்தில் எதுவுமே_
_இல்லாத_ _பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை_
_நினைத்துப் பயப்படாமல்_ _இருந்தால்_
_*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*_

_உனக்கு நம்பிக்கை_ _இருக்கிறதா ???_
_*நம்பிக்கை இருந்தால் நல்லது*_

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material