செல்லும் வழி எங்கும் அன்பினை விதைப்போம்... சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்...

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு
இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. "அற்புதம்" என்றார் மேலாளர்... "இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம்" என்று அந்த கம்பெனிமுதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர். முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல் கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..

காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. இளைஞன் சோர்ந்தான்..

தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்..

பின்னர் சரிசெய்யலாம் என்றார்.
மேலாளர்..

காரை கஷ்டப்பட்டு இதே வாயில் வழியே எடுத்து செல்லலாம்..

மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும்... இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு

செல்ல முடியலையே... இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்... அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப் போகிறான் என்று..

வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக் கொள்ளலாம்.. அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி.... வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.. ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே...

ஒருவரின் தோற்றம் மற்றும் நிலையை வைத்து அவர் சொல்ல வரும் நல்ல விசயங்களை இழந்து விடாதீர்கள். அது எங்கேனும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவலாம். அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள்.. அது உங்கள் எண்ணங்கள் உயர வழி வகுக்கும்... வாழ்க்கை மிக அழகானது... அதில் கோபம் குரோதம் பிடிவாதம் போன்றவற்றால் நிரப்பி அதன் பொலிவைக் கெடுத்து இன்னலில் சிக்கி தவிக்க வேண்டாமே...

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material