எதுவும் கைகொடுக்காது
ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.... ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க.... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த...