பாடம் கற்றுக் கொள்வது யாரிடம் ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார் அந்த புலி என்ன பண்ண...