Posts

கோபப்படும் உரிமையை நீதானம்மா கொடுத்த

Image
மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத் தேடியபோதுதான் மண்டபத்தில் தாய்மாமனைக் காணவில்லையென்று அறிந்தது மணமேடை பத்திரிக்கையில் தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற கோபத்தை கல்யாணத்தை புறக்கணித்தலால் ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன் மண்டப வாசலில் முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார் கையைப் பற்றிய மச்சானின் அழைப்பை உதறிவிட்டு தங்கையின் அழுகையை தரையில் எறிந்தார் பங்காளிகள் பஞ்சாயத்தை சொம்போடு வீசினார் யார் பேச்சுக்கும் மசியாமல் வீராப்பு காட்டியவரை மாமா என்றழைப்பில் கண்ணீர் கசியச் செய்த மணப்பெண் மணமேடை இறங்கியிருந்தாள் நீ எதுக்கும்மா வந்த என்று துண்டு கீழே விழுந்தது தெரியாமல் உருகியோடியவர் பொண்ணை மணமேடையில் நிறுத்தியபோது நல்ல நேரம் துவங்கியிருந்தது நான் கோபப்படும் உரிமையை நீதானம்மா கொடுத்த என்றபடி தாய்மாமன் சீர் செய்தவரின் காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில் அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார் ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம் மண்டப வாசலில் துண்டாகிக் கிடந்தது வீராப்பு.

🔎 *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே* 🔍

Image
இளம் வயது பெண்  ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை  நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என  ஆதங்கப்பட்டார். அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! *"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"* இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,  வாய்ச்சண்டை போடு...

வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது

ஒரு #கிராமம். 👦 சிறுவன் ஒருவன் #ஏரிக்கரையில்_விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “#என்னை_காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் #முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. உன்னை விடுவித்தால் என்னை #விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று #கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை. பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். #இதுதான்_உலகம்_இதுதான்_வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு #சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை #ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், #நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. #மரத்திலிருந்த_பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ...

விளம்பரம் செய்த மாயை

Image
இன்று ஆரோக்கியத்தினை அடகு வைத்துவிட்டோம்... #விழிப்புணர்வுபதிவு.... #அரிசிச்சோறு சாப்பிட்டா #சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிடச் சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்கன்னு சொன்னாங்க. சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா #பூச்சிமருந்து தெளிக்கறாங்க #ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க. போய்ப் பார்த்தா ஆனை விலை ,குதிரை விலை. இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம். இப்ப என்னடான்னா #ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய்தான் ஆர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.... உப்பையும், சாம்பலையும் #வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம்.  இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா #எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால #பேஸ்ட் தான் நல்லதுன்னு சொன்னாங்க.  அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி.... கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கான்னு கேக்குறான்.  பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட்...

TNTEU -B.Ed. FIRST YEAR SYLLABUS

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக முதலாமாண்டு பி.எட். மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை பெற CLICK  HERE

WORKING MODEL - ALL IN ONE (ANGELES))

எளிய விளக்கங்களும் கணிதத்தை மனதில் நிலை நிறுத்தும்.  c lick here

Ven diagram TLM

 கணிதத்தை எளிய முறையில் கற்பிக்க கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்த படுகின்றது. click  here