வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை
ஒரு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் வந்திருந்தார். இதை அறிந்த அவ்வூர் மக்கள் அவரைக் காண ஏராளமாக குவிந்திருந்தனர். அக்கூட்டத்தில் ஒரு இளைஞர் மிகவும் சோகமாக காணப்பட்டார். அவரைக் கண்ட துறவி தன்னிடம் அவரை அழைத்து இளைஞரின் சோகத்திற்கான காரணத்தை கேட்டார். இளைஞரோ தன் வாழ்வு தாங்க முடியாத வலியும், வேதனையும், சோகமும் நிறைந்தது என்றும் தன்னால் மகிழ்வாக வாழ முடியவில்லை என்றும் காரணத்தை கூறினார். இதை கேட்ட துறவியோ 'சரி.. நீ சென்று கைநிறைய உப்பு எடுத்துவா..' என்றார். சிறிது நேரம் கழித்து உப்புடன் வந்தார் இளைஞர். துறவி இளைஞரை அழைத்துச் சென்று ஒரு குவளை குடிநீரில் ஒருபாதி உப்பை கரைத்து குடிக்கச் சொன்னார். உப்பு கலந்த நீரை குடித்த இளைஞன் மிகுந்த உவர்ப்பு காரணமாக முகம் சுழித்தார். துறவி 'குடிநீர் சுவை எப்படி உள்ளது?' என்றார். இளைஞன் 'மிகவும் உவர்ப்பு...' என்றான். மீண்டும் இளைஞனை அழைத்துக் கொண்டு துறவி அருகாமையில் இருந்த ஒரு ஏரிக்கரைக்கு சென்றார். இளைஞனின் கையில் இருந்த மறுபாதி உப்பை ஏரியின் நீரில் போடச்சொன்னார். பின் ஏரியில் உப்பு கரைந்த நீரை குடிக்கச் சொன்னார்....