Posts
Showing posts from September, 2020
உழைப்பே உயர்வினை தரும்.
- Get link
- X
- Other Apps
அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்......!! அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!! யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!! அரசன் காலையில் எழுந்து கொண்டபோது , நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!! அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!! அரசன் அந்த நெசவாளியிடம் "இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!! ‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!! குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது...... ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!! ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!! இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!! இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!! அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!! ‘...